Sunday, 20 January 2013
கொங்கு வேளாளரின் குல (காணி)தெய்வம்
கொங்கு வேளாளரின் குல (காணி)தெய்வம்
கொங்கு வேளாளரின் குல தெய்வம் என்பது காளியம்மனின் பல்வேறு வடிவங்கள் தான். நாம் குலதெய்வமாக வணங்கும் காளியம்மன் அல்லாத தெய்வங்கள் நாம் இஷ்டதெய்வமாக ஏற்றுகொண்டவைதான்.
அதற்கு மிக சிறந்த உதாரணம், நமது மொளசி கன்ன குல சொந்தங்கள் வழிபடும் இளையபெருமாள். முன்னாளில் கன்னிவாடியில் இருந்து வந்து, மோரூர் நாட்டின் ஆட்சிபொறுப்பை பாண்டியர் காலத்தில் பெறப்பட்டது. பின்னர் மோரூர் நாட்டிலிருந்து மொளசி நாடு பிரிந்த போதும், குலதெய்வ வழிபாட்டு கடமை காலத்தில் நடைபெற, ஏற்கனவே வணங்கி வந்த மோரூர் நல்லபுள்ளியம்மன விடுத்து, மொளசி நாட்டில் ஆதி கன்ன குலத்தார் வணங்கி வந்த உஞ்சனை காளியம்மனை குலதெய்வமாக வணங்கி வந்தனர். பின்னர் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் வைணவம் பெரிதாக பரவியது. மதுரை மன்னர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான மொளசி கன்ன குலத்தார், நாயக்கர்கள் விருப்பப்படி மொளசி நாட்டில் பெருமாளுக்கு மலைக்கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இன்று இளையபெருமாளே அவர்கள் குலதெய்வம் என்னும் நிலை வந்துவிட்டது.
உஞ்சனை அம்மன் நம் குலதெய்வம் என்பதும், இளையபெருமாள் முன்னோர் வணங்கிய இஷ்ட தெய்வம் என்பதும் உணரப்பட வேண்டும். இவர்கள் மட்டுமின்றி வல்லவராய பெருமாள், சென்றாயபெருமாள் என வைணவ மார்கத்தில் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்ற நிகழ்வு நாயக்க மன்னர்களின் தூண்டுதலால்/நிர்பந்தத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதையும் உணரவேண்டும்.
இதேதான் மணியன் குலத்தார் வணங்கும் நவலடியானுக்கும், குப்பண்ண சாமிக்கும், வெள்ளோடு சாத்தந்தை ராசா கோவிலுக்கும், தென்முகம் சாத்தந்தை-பயிரன் அண்ணன்மார் கோவிலுக்கும் பொருந்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment