Wednesday, 27 November 2013
தீண்டத் தகாதவர் பட்டியலில் வேட்டுவர்
வேட்டுவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடி என்றும் உயர்ந்த இனம் என்றும் தங்களுக்கு மரியாதை கிடைக்க வில்லை என்பதால் கவுண்டர் என்னும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் பட்டத்த்தை பயன்படுத்தியும் கட்டு கதைகளை எழுதி வருகின்றனர்.. இவர்கள் பல இடங்களில் தீண்டத் தகாத இனமாக இருப்பதற்கு ஆதாரத்தை இங்கு சமர்பிக்கிறேன் புழுவர் என்னும் சாதியும் வெட்டுவ இனத்தில் ஒரு சாதியாகும் .... (உண்மயை சொல் உரக்க சொல்)
Source:socialjustice.nic.in
Saturday, 16 November 2013
கொங்க தேசம்
குளிர்ந்தநதி பன்னிரெண்டு:
ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
காஞ்சி (நொய்யல்),
வானி (வவ்வானி, பவானி),
பொன்னி (காவேரி),
சண்முகநதி,
குடவனாறு (கொடவனாறு),
நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
மீன்கொல்லிநதி
சரபங்கநதி
உப்பாறு
பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்
கருவூர் [கரூர்],
வெஞ்சமாக்கூடல்,
திருச்செங்கோடு,
திருநணா [வவ்வானி - பவானி],
கொடுமுடி,
திருமுருகன்பூண்டி,
திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு:
கருவூர்,
தாராபுரம்,
மூலனூர்,
விளங்கில்
கொங்கதேசத்தின் இருபத்திநாலு நாடுகள்:
1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10.வாழவந்தி நாடு
11. தட்டய நாடு
12. பூவாணிய நாடு
13. அரைய நாடு
14. ஒடுவங்க நாடு
15. வடகரை நாடு
16. கிழங்கு நாடு
17. அண்ட நாடு
18. வெங்கால நாடு
19. காவடிக்கா நாடு
20. ஆனைமலை நாடு
21. ராசிபுர நாடு
22. காஞ்சிகோயில் நாடு
23. நல்லுருக்கா நாடு
24. குறுப்பு நாடு
"கோயம்புத்தூர்" பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?
"கோயம்புத்தூர்" பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?
காஞ்சிநதியின் (நொய்யல்) வடக்கு நீர்பிடிப்புப்பகுதிகளே ஆறைநாடாகும். இதுவே கோயமுத்தூர் பீட பூமி (Coimbatore plateau) எனப்படுகிறது: http://kongupattakarars.blogspot.in/2011/03/5.html
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில்(மலைய குலம்) கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பால வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
நம் கவியரசர் கண்ணதாசனவர்கள்
கூறுகின்ற விளக்கத்தை பாரீர்.
கன்னியரின் இதழழகை கோவையென்பார்!
கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.
இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!
வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்.
தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்.
இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி.
அதனைக்கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.
தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!
நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்!
வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு?
நன்றி சிவா
நானுமதைச் செய்துவிட்டேன்.
வேட்டுவர்களின் தில்லுமுல்லும் திருட்டுத் தனமும்.
கொடிவேரி அணை தமிழ் நாட்டின் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது. ஈரோடு நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலேயே உள்ள இந்நகரம் அதனுடைய கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
ஈரோடு புகைப்படங்கள் - கொடிவேரி அணை
Image source:en.wikipedia.org
மைசூர் மகாராஜா 17-வது நூற்றாண்டில் இந்த அணையைக் கட்டினார். நெல்லும் கரும்பும் இங்கு விளையும் முக்கிய பயர் வகைகளாகும். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும்.
இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. கழிப்பிட வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு பூங்காக்களை அரசு இங்கு ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்து இந்த அணைக்கட்டின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
இந்த உண்மை ஒரு புறம் இருக்க வேட்டுவர் இனத்தவர் இந்த கொடிவேரி அணையை கட்டியவன் இவர்கள் இனத்தை சார்ந்த அரசன் கொங்காள்வன் என்று கட்டு கதை விடுகின்றனர்..உண்மையில் இவர்கள் இனத்தில் கொங்கால்வானம் என்ற அரசனே கிடையாது அந்த மன்னன் கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவன்..இவன் அந்த அணையை எல்லாம் கட்ட வில்லை..
அண்ணன்மார் சாமி
:
பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது.கொங்கு வேளாளர் சாதியில் அண்ணன் மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். வேளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது. இக்கதைச் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.
அப்போதிருந்து இன்றுவரை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நல்லுறவு கிடையாது. ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மைதான் நிலவுகின்றது.‘அண்ணன்மார் கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது; வீரப்பூர் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழாவின்போது அண்ணன் மார் அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்; அண்ணன்மார் கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்’.வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தது. கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்தாப்போல்
வெள்ளமதுபோல வீரமலை வனங்களெல்லாம்
வேடுதளம் நிற்குதப்போ
அந்தப்படை சேனை எல்லாம் அணிஅணியாய்
வந்து நிற்க’ (ப.395)
என்று வேடுவர் படையை வருணிக்கிறது அண்ணன் மார் சுவாமி கதை. அதுமட்டுமல்ல, வேட்டுவர் களைப் பூண்டோடு கருவறுக்க முடிவெடுத்துப் பொன்னர் செய்யும் போரை அண்ணன்மார் சுவாமி கதை இவ்விதம் விவரிக்கிறது:
தட்டைய நாடும் தாராபுர நாடும்
பள்ளிப்பொதி நாடு பருத்திப்பொதி நாடு
வெத்திநாடு வேங்கல நாடு இதுவெல்லாம் வெட்டியே சங்கரித்து
ஆத்தூரு பின்னம் அடுத்த பவுத்திரமும்
காங்கைய நாடும் கருவூர்ப்பதி நாடும்
வெண்டையம் குலுக்கி நாடு வெத்தியுள்ள நன்னாடும்
பூந்துறை நாடும் புகழ் பெரிய நன்னாடும்
ஓமல நாடு ஓங்குபுகழ் அறைய நாடு
கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு
பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு
வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து
ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்
(ப.413)
அதாவது வேட்டுவர் வாழ்ந்த பல இடங் களுக்கும் பொன்னர் படை சென்று அவர்களைக் கருவறுக்கும் விதத்தில் போர் புரிந்ததாக இப்பகுதி தெரிவிக்கிறது. அக்காலத்தில் பெரும்பகுதியும் காடாக இருந்த கொங்கு நாட்டில் வேட்டுவர் குடியிருப்புகளைத் தாக்கி அழித்தது வேளாளர் படை எனக் கொள்ள இடமிருக்கிறது. வேளாண்மை நில உருவாக்கத்திற்கு வேட்டுவரையும் அவர் சார்ந்த காடுகளையும் அழித்தல் தேவை. ஆகவே இது மிக முக்கியமான போர். வேட்டுவர்களும் மிகக் கடுமை யாகப் போராடி உள்ளனர். வேட்டுவப் பெண் ஒருத்தி பொன்னரைப் பார்த்து,
‘நாங்கள் பலி எடுக்காது போனாலும் நலமுடனே எங்களுட
வயிற்றுக்கரு உனை வகையாய் பலிவாங்கும்’ (ப.413)
என்கிறாள். அந்த அளவு ஆக்ரோஷமான போர் என இக்கதை கூறுகின்றது. வேட்டுவர் சாதியே அழிந்துவிடும் என்னும் நிலையில் மாயவரின் செயலால் அந்தச் சாதிக்குப் பொன்னர் கருணை காட்டுகிறார். அதை,
‘கட்டை தழையுமடா கருவுகள் உண்டாகுமினி
வெட்ட வெட்டத்தான் தழைக்கும் வெத்தி வேங்கள நாடு’ (ப.415).
வேட்டுவரைக் கண்டு ஒதுங்கிப் போகும் நிலையை வேளாளர் கடைப்பிடிக்கின்றனர். அதற் கேற்ப அவர்களது குணாம்சம் பற்றிய சில பழமொழிகள் உருவாக்கம் பெற்றுள்ளன.
‘வெள்ளாட்டுக்குத் தீனி போடக் கூடாது;
வேட்டுவனுக்குச் சோறு போடக் கூடாது’
என்பது ஒரு பழமொழி. வெள்ளாட்டுக்குத் தீனி போட்டு அன்பாக வளர்த்தாலும் அதற்கு நன்றி விசுவாசம் இருக்காது என்பது பொது நம்பிக்கை. வளர்த்த கடா மார்பிலே பாய்தல் என்னும் வழக்கும் உண்டு. ஆகவே வெள்ளாட்டின் மீது அன்பு வைத்துத் தீனி போட்டு அதை வளர்க்கக் கூடாது என்கிறது பழமொழி. அதேபோல வேட்டுவனுக்குச் சோறு போட்டால் அவனும் நன்றி விசுவாசத்தோடு நடந்துகொள்ள மாட்டான் என்பது பழமொழியின் கருத்து.
இது போன்ற மற்றொரு பழமொழி,
‘வயிறு முட்டச் சோறு போட்டாலும்
வேட்டுவன் மோட்டுவளையப் பாப்பான்’
என்பது. இந்தப் பழமொழியைக் கேட்டதும் போட்ட சோறு போதாமல் வீட்டின் உள்பகுதி மேற்கூரையான மோட்டுவளையைப் பார்ப்பான். வேட்டுவர்
திருடர், நன்றி யில்லாதவர் என இப்பழமொழி கட்டமைக்கிறது.
வேட்டுவர்களும் அவர்களின் பூர்விகமும்
வேட்டுவர்களும் அவர்களின் பூர்விகமும்: வேட்டுவர்களின் முன்னோராக கண்ணப்ப நாயனார் அவர்கள் கருத படுகிறார்.இவரின் பூர்விகம் பற்றி ஒரு பார்வை:
பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.
உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது. இப்படி இருக்க இவர்கள் கொங்க அல்லது கங்க நாட்டை சொந்தம் கொண்டாடுவது முரண் அற்றது. இவர்களில் இன்றும் வடுக வேட்டுவர் என்ற ஒரு பிரிவு உள்ளது.இந்த வடுக வேடர்களே வேடுவர்களின் ஆதி குலமாக இருக்க வேண்டும்.
கொங்கர் எனும் வார்த்தையும் வேடுவர்களும்:
"கொங்கச் செல்வி குடமலையாட்டி" - சிலப்பதிகாரம் 12-1-47
இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார். பாலைநிலத்து வேட்டுவர் விழாக் கொண்டாடும்போது சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லும்போது கண்ணகியை “இவளோ கொங்கச்செல்வி, குடமலையாட்டி” எனக் கூறுகிறாள். ஆக வேட்டுவர்(வேடுவர், வேட்டையாடும் இனத்தோர்) கொங்கர்களல்ல, கொங்கர் என்ற பதம் வேட்டுவருக்கல்ல என்று தெரியவருகின்றது.
குரவர்களும் வேட்டை தொழிலை தான் குல தொழிலாக வைத்திருந்தனர் இவர்களும் குறவர் இனத்தவரின் பிரிவாகத்தான் இருக்க வேண்டும்.வடுகபட்டிக்கும் கொங்கு நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை ஆந்திராவில் இருந்து பொழைக்க வந்த இனம் என்பது விளங்குகிறது.
Subscribe to:
Posts (Atom)