Saturday, 16 November 2013
அண்ணன்மார் சாமி
:
பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது.கொங்கு வேளாளர் சாதியில் அண்ணன் மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். வேளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது. இக்கதைச் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.
அப்போதிருந்து இன்றுவரை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நல்லுறவு கிடையாது. ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மைதான் நிலவுகின்றது.‘அண்ணன்மார் கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது; வீரப்பூர் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழாவின்போது அண்ணன் மார் அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்; அண்ணன்மார் கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்’.வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தது. கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்தாப்போல்
வெள்ளமதுபோல வீரமலை வனங்களெல்லாம்
வேடுதளம் நிற்குதப்போ
அந்தப்படை சேனை எல்லாம் அணிஅணியாய்
வந்து நிற்க’ (ப.395)
என்று வேடுவர் படையை வருணிக்கிறது அண்ணன் மார் சுவாமி கதை. அதுமட்டுமல்ல, வேட்டுவர் களைப் பூண்டோடு கருவறுக்க முடிவெடுத்துப் பொன்னர் செய்யும் போரை அண்ணன்மார் சுவாமி கதை இவ்விதம் விவரிக்கிறது:
தட்டைய நாடும் தாராபுர நாடும்
பள்ளிப்பொதி நாடு பருத்திப்பொதி நாடு
வெத்திநாடு வேங்கல நாடு இதுவெல்லாம் வெட்டியே சங்கரித்து
ஆத்தூரு பின்னம் அடுத்த பவுத்திரமும்
காங்கைய நாடும் கருவூர்ப்பதி நாடும்
வெண்டையம் குலுக்கி நாடு வெத்தியுள்ள நன்னாடும்
பூந்துறை நாடும் புகழ் பெரிய நன்னாடும்
ஓமல நாடு ஓங்குபுகழ் அறைய நாடு
கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு
பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு
வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து
ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்
(ப.413)
அதாவது வேட்டுவர் வாழ்ந்த பல இடங் களுக்கும் பொன்னர் படை சென்று அவர்களைக் கருவறுக்கும் விதத்தில் போர் புரிந்ததாக இப்பகுதி தெரிவிக்கிறது. அக்காலத்தில் பெரும்பகுதியும் காடாக இருந்த கொங்கு நாட்டில் வேட்டுவர் குடியிருப்புகளைத் தாக்கி அழித்தது வேளாளர் படை எனக் கொள்ள இடமிருக்கிறது. வேளாண்மை நில உருவாக்கத்திற்கு வேட்டுவரையும் அவர் சார்ந்த காடுகளையும் அழித்தல் தேவை. ஆகவே இது மிக முக்கியமான போர். வேட்டுவர்களும் மிகக் கடுமை யாகப் போராடி உள்ளனர். வேட்டுவப் பெண் ஒருத்தி பொன்னரைப் பார்த்து,
‘நாங்கள் பலி எடுக்காது போனாலும் நலமுடனே எங்களுட
வயிற்றுக்கரு உனை வகையாய் பலிவாங்கும்’ (ப.413)
என்கிறாள். அந்த அளவு ஆக்ரோஷமான போர் என இக்கதை கூறுகின்றது. வேட்டுவர் சாதியே அழிந்துவிடும் என்னும் நிலையில் மாயவரின் செயலால் அந்தச் சாதிக்குப் பொன்னர் கருணை காட்டுகிறார். அதை,
‘கட்டை தழையுமடா கருவுகள் உண்டாகுமினி
வெட்ட வெட்டத்தான் தழைக்கும் வெத்தி வேங்கள நாடு’ (ப.415).
வேட்டுவரைக் கண்டு ஒதுங்கிப் போகும் நிலையை வேளாளர் கடைப்பிடிக்கின்றனர். அதற் கேற்ப அவர்களது குணாம்சம் பற்றிய சில பழமொழிகள் உருவாக்கம் பெற்றுள்ளன.
‘வெள்ளாட்டுக்குத் தீனி போடக் கூடாது;
வேட்டுவனுக்குச் சோறு போடக் கூடாது’
என்பது ஒரு பழமொழி. வெள்ளாட்டுக்குத் தீனி போட்டு அன்பாக வளர்த்தாலும் அதற்கு நன்றி விசுவாசம் இருக்காது என்பது பொது நம்பிக்கை. வளர்த்த கடா மார்பிலே பாய்தல் என்னும் வழக்கும் உண்டு. ஆகவே வெள்ளாட்டின் மீது அன்பு வைத்துத் தீனி போட்டு அதை வளர்க்கக் கூடாது என்கிறது பழமொழி. அதேபோல வேட்டுவனுக்குச் சோறு போட்டால் அவனும் நன்றி விசுவாசத்தோடு நடந்துகொள்ள மாட்டான் என்பது பழமொழியின் கருத்து.
இது போன்ற மற்றொரு பழமொழி,
‘வயிறு முட்டச் சோறு போட்டாலும்
வேட்டுவன் மோட்டுவளையப் பாப்பான்’
என்பது. இந்தப் பழமொழியைக் கேட்டதும் போட்ட சோறு போதாமல் வீட்டின் உள்பகுதி மேற்கூரையான மோட்டுவளையைப் பார்ப்பான். வேட்டுவர்
திருடர், நன்றி யில்லாதவர் என இப்பழமொழி கட்டமைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
பொன்னர் சங்கர் கதையில் இரண்டு தமிழ் இனங்களான வெள்ளாளர் கொங்கு நாட்டு பூர்வகடிகளான வேட்டுவர் இரண்டு சாதியில் வெள்ளாளரை மட்டும் உயர்வாகவும் வேட்டுவரை தாழ்வாகவும்,இழிவாகவும் எழுதப்பட்டிருக்கிறது
ReplyDeleteபொன்னர் சங்கர் கதை உடுக்கையடிப்பாடலாக இருந்து நாளடைவில் நூலாக வெளி வந்தது.கள்ளழகர் அம்மானை, பிச்சன் எழுதிய அண்ணமார் சாமி கதை சாதி வெறியை தூண்டும் வகையில் எழுதி இருக்கிறார்.எனவே வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் சாதி வெறியூட்டும் நூல் என்று தடை செய்யப்பட்டிருந்தது.
பின்னர் வந்தவர்கள் அப்படியே பிச்சன் எழுதியதை படி எடுத்து எழுதிவிட்டார்கள். தமிழக முதல்வர் அவர்களும் இக்கதையை ஆய்வு செய்யாமல் அப்படியே பிச்சனை ஒற்றியே பொன்னர் சங்கர் கதையை எழுதியுள்ளார். இதில் சிறிதும் உண்மையில்லை என்பதை வரலாற்று சமூக ஆய்வாளர்களின் கருத்துக்களை வெளியிட உள்ளோம்.
இக்கதையை பல வருடங்களாக ஆய்வு செய்த கரூரை சேர்ந்த சமூக வரலாற்று ஆய்வாளர் திரு. இல.பரணன் அவர்கள் தாம் ஆய்வு செய்த கருத்துக்களை தொகுத்து பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
சங்க காலத்தில் இருந்து அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து வாழ்ந்து வந்தவர்கள் வேட்டுவர் இனம். முதன் முதலாக கவுண்டர் என்ற பட்டம் பெற்ற முதல் தமிழ் இனம் வேட்டுவர்கள்.
சிற்றரசர்களாகவும், மன்னர்களாகவும்,பாளையகாரர் ஆகவும், பட்டக்காரர் ஆகவும், மண்றாடிகள், வள்ளல்களாகவும் வாழ்ந்த வந்த இனத்தின் மீது கொண்ட காழ்புணர்ச்சி யினால் பொய்யாக புனைந்து எழுதப்பட்ட கதை இதற்கு எந்த ஆவணமோ,கல்வெட்டுகள், செப்போடு பட்டயமோ,வரலாற்று ஆவணங்களோ கிடையாது.
நாட்டுப் பாடல்காரர்களின் வர்ணனைகளை வரலாற்று உண்மை என்று நம்பிகொண்டிருப்பவர்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க சமூக ஆய்வாளர்கள் தயாரக உள்ளனர்.
தலையூர்காளியின் வரலாற்றை ஆராய்ந்து பொன்னர் சங்கர் கதை உண்மை வரலாற்றை மறைத்து புனையப்பட்ட ஒரு கற்பனையான கதை என்பதை ஆதாரபூர்வமாக வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபித்துள்ளார் வரலாற்று சமூக ஆய்வாளர் திரு.இல.பரணன் அவர்கள்.
மதிப்பிற்குரிய ஐயா,
Deleteஎனக்கு அந்த பிச்சன் எழுதிய கல்லழகர் அம்மானை என்ற புத்தகம் கிடைக்குமா???
தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
ReplyDeleteகாட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேடுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்கப் பொங்கஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் அண்ணன்மார். வேடுவர்களின் குடியிருப்பான காட்டைஅழித்து நிர்மூலமாக்கி வெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால், காட்டில் சுதந்தரமாகத் திரிந்தஅவர்களது பன்றிகளும், விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்ன?தலையூர்க்காளிக்கும் அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண்இச்சையால் வந்த பகை அல்ல. மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
அண்ணன்மார் வேடுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டு, காளியிடம்போய்க்கதறி வேண்டுகிறான்.உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்டவெட்டத் தழையும் உன் குலம்’ என்று வரம் கொடுக்கிறாள். ஒரு வஞ்சகனை, பெண்பித்தனைகடவுள் எப்படி ஏற்றுக் கொண்டு வரம் கொடுக்கும்?அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான்காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்து அவர்களை அடித்துப்போட்டுவிட்டது.அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, ‘காட்டைச் சீர்திருத்தி வெள்ளாமை செய்துபிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்... இதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டாள்.காட்டுத்தெய்வமும் மனமிரங்கி ‘காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் என்றஅவச்சொல்லுக்கு ஆளானீர்கள். முழுக்க காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும், காட்டில்வசிக்கும் வேடர்களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக...’ என்றுஅண்ணன்மாரைஉயிர்ப்பித்துவிட்டது.
இதுவரை நிறைய ஆய்வுகள் வந்து கொண்டிருந்தாலும் காத்திரமான தளத்தை நோக்கிநகரவில்லை. ஆய்வியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த திருமதிபிரெண்டாபெக்,சக்திக் கனல் போன்றோரின் கதைப்பிரதிகள் இவ்வாய்வு தளத்திலேயே செயல்படுகின்றன.இதுவரை அச்சு வடிவம் பெறாத மாற்றுக் கதைச் சொல்களையும், அச்சு வடிவமாக்கிஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்தச் செழுமை மிக்க கதைப்பாடல், மனித மனங்களில்நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். உலக அளவிலான இலக்கியத் தளங்களில் தனது சுவடுகளைப்பதிக்கும்.
hi Boopathi chandrasekaran, i need your contact, plz, i dont know why u Disgusting others mind and heart by saying tales..plz, dont change the history.. first see yourself, really ur posts are horrible,,is u are human being?..plz change your attitude and mind, please read books and see what is true....dont speak whatever u think,....really u are such a horrible...tchaa
ReplyDeleteஇது உண்மை இல்லை என்றால் வீரப்பூர் திருவிழாவிற்கு அதுவும் அம்பு விடும் இடத்திற்கு வாருங்கல் பொன்னர்சங்கரின் வீரம் அப்போது தெரியும் கண்டீபா வாங்க
ReplyDelete